ஸ்விட்சர்லாந்து தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்

ஜூலை 22, 2024

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Francois Garraux இன்று (ஜூலை 22) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை தனது பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.

விடைபெற்று செல்லும் பாதுகாப்பு ஆலோசகருடன் சுவிட்சர்லாந்து துணைத் தூதுவர் ஒலிவியர் பராஸ் மற்றும் புதிதாக நியமனம் பெற்றும் வரும் பாதுகாப்பு ஆலோசகர், Colonel (GS) Daniel Bader அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

பாதுகாப்புச் செயலர், விடைபெற்று செல்லும் பாதுகாப்பு ஆலோசகருக்கு நன்றி தெரிவித்ததுடன் அவரது எதிர்கால அபிலாஷைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெற்றும் வரவிருக்கும் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் பேடரை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பையும் இந்த சந்திப்பு வழங்கியது, அவர் தனது முன்னோடியின் முன்முயற்சிகளை தொடர்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

ஜெனரல் குணரத்ன, புதிதாக நியமனம் பெற்றும் வரவிருக்கும் பாதுகாப்பு ஆலோசகரை வரவேற்றத்துடன் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் உறவுகளின் தொடர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.