அங்கவீனமுற்ற படைவீரருக்கு மின்சார முச்சக்கரவண்டி வழங்கப்பட்டது

ஜூலை 22, 2024

அங்கவீனமுற்ற படைவீரர் ஒருவருக்கு புதிய மின்சார முச்சக்கரவண்டி ஒன்று இன்று (ஜூலை 22) வழங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் அங்கவீனமுற்ற படைவீரர் HBMR ஆரியரத்னவிற்கு இம்மின்சார முச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது காயமடைந்து மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்ற பயனாளியான அங்கவீனமுற்ற போர் வீரருக்கு திரு வெமிந்திர சங்கக்காரவின் அனுசரணையுடன் இம்மின்சார முச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.

இந்த மின்சார முச்சக்கரவண்டி அங்கவீனமுற்ற படைவீரரின் அன்றாட வாழ்க்கையை மேலும் எளிதாக்க பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் அனுசரணையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.