சுனாமியின் 16வது ஆண்டு நினைவு தினம் இலங்கையினால் அனுஷ்டிப்பு

டிசம்பர் 26, 2020

2004 ம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி ஆழிப் பேரலலையினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூரும் வகையில் இன்று (டிசம்பர், 26) காலை 09.25 மணிக்கு நாடு தழுவிய இரண்டு நிமிட மெளனாஞ்சலி  செலுத்தப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சுனாமி தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் சுனாமியின் 16வது ஆண்டு நினைவு தினம் இலங்கையர்களினால் அனுஷ்டிக்கப்பட்து.

இந்த ஆழிப்பேரலை காரணமாக இந்து சமுத்திரத்தில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கரையோர கிராமங்களில் வசித்த 35,000க்கும் மேற்பட்டோர்  ஆழிப்பேரலை தாக்கம் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.