இராஜாங்க அமைச்சர் தென்னகோன் அவர்களின் முன்னோடி திட்டமாக ரூபா. 23.5 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட தம்புள்ளை ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடம் கையளிப்பு

ஜூலை 23, 2024
  • இலங்கை விமானப்படை பணியாளர்களின் முழுமையான பங்களிப்புடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவுசெய்யப்பட்டது

புதிதாக புனரமைக்கப்பட்ட தம்புள்ளை ஆரம்ப வித்தியாலயம் (ஜூலை 22) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது மாணவர்களின் பயன்பாட்டுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படை (SLAF) தொழில்நுட்ப மற்றும் பணியாளர்களின் முழுமையான பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட இந்த பாடசாலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித்த பண்டார தென்னகோன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்  கௌரவ ஜனக பண்டார தென்னகோன் ஆகியோரினால் மாணவர்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் தென்னகோனின் வழிகாட்டலில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக பாடசாலையின் பராமரிப்பு மற்றும் நவீனமயப்படுத்தலுக்கு ரூபா. 23.5 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

இதற்கமைய, மேற்படி பாடசாலையின் கட்டிடங்கள், மின்சாரம், நீர் மற்றும் சுகாதாரம் உட்பட தேவையான அனைத்து வசதிகளும் புதிதாக மறுசீரமைக்கப்பட்டு கமாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது.`

இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் தென்னகோன், சமய, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த தம்புள்ளை பிரதேசத்தை கல்வி கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு தேவையான பணிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.

அத்தோடு எமது பிள்ளைகளுக்கு நடைமுறை அறிவு, தைரியம் மற்றும் தலைமைத்துவத்தை பாடசாலையின் ஊடாக வளர்ப்பதற்கு எதிர்கால சந்ததியினருக்கான முதலீடு பாடசாலை முறையிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படை சிகிரியா தள கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் விரங்க பிரேமவர்தன, கல்வி திணைக்கள மற்றும் அரச அதிகாரிகள், அதிபர், ஆசிரியகள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.