இலங்கை கவச வாகன படையணியில் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் நினைவேந்தல்

ஆகஸ்ட் 12, 2024

இலங்கை கவச வாகன படையணி லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் நினைவு பேருரையை 09 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை கவச வாகன படையணி உணவகத்தில் நடாத்தியதுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களும் கௌரவ அதிகாரியாக கலந்து கொண்டார்.

இந் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் துணைவியர் திருமதி லாலி கொப்பேகடுவ அவர்கள் கலந்துகொண்டனர்.

மங்கள விளக்கேற்றல், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தல், போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தல் மற்றும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் விழா ஆரம்பமாகியது.

பின்னர், இலங்கை கவச வாகன படையணியின் வரலாறு மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் காணொளி காட்சிப்படுத்தப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து இலங்கை கவச வாகன படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளயுவீ ஆர்டப்ளியுவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. படையணி அணிவகுப்பு மரியாதையினை தொடர்ந்து, பிரதம அதிதி லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ அவர்களின் பாரம்பரியத்தையும், தேசத்திற்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பையும் வலியுறுத்தி உரையாற்றினார்.

மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் சேவை மற்றும் தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் அவரது நினைவாக விசேட காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.நிகழ்வின் சிறப்பம்சமாக, மேஜர் ஜெனரல் என்.ஆர். மராம்பே (ஓய்வு) ஆர்டப்ளியுவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் மறைந்த லெப்டினன் ஜெனரலின் தலைமை மற்றும் தைரியத்தை பிரதிபலித்து நினைவுச் சொற்பொழிவு ஒன்றினை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இலங்கை கவச வாகன படையணி தலைமையக படைத்தளபதியின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

இந் நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், முன்னாள் முப்படை தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் அவர்களின் துணைவியர்கள் அரச அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

நன்றி - www.army.lk