--> -->

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 13வது இலங்கை பொருளாதார ஆராய்ச்சி மாநாடு 2024 நடைபெற்றது

ஆகஸ்ட் 15, 2024

இலங்கையின் புகழ்பெற்ற ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகதின் (KDU) 13வது இலங்கை பொருளாதார ஆராய்ச்சி மாநாடு 2024 (SLERC) அண்மையில் (ஆகஸ்ட் 09) நடைபெற்றது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான ‘அடிப்படைகளுக்குத் மீள திரும்புதல்’ என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட மாநாடு, KDU இன் மேலாண்மை, சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

KDU உபவேந்தர் ரியர் அட்மிரல் HGU தம்மிக்க குமார, பிரதம அதிதியாக ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டார். இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, “இலங்கையின் நெருக்கடி, மீட்சி மற்றும் முன்னோக்கி செல்லும் வழி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கையின் ஒரே பாதுகாப்பு பல்கலைக்கழகம் KDU ஆகும். முப்படை கேடட் அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டதாரி மாணவர்கள் கல்வி பயிலும் இக்கலாசாலை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் சங்கம் (IAU) ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.

ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கை பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள் மன்றத்தின் தலைவர் கலாநிதி வசந்த பிரேமரத்ன, முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதநேய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி லக்ஷிகா லியனகே, 13வது இலங்கை பொருளாதார ஆராய்ச்சி மாநாட்டின் தலைவர் கலாநிதி தமரா ஜயசுந்தர உட்பட பல உள்ளூர் பல்கலைக்கழகங்க பொருளாதார நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

பேராசிரியர். என்.எஸ்.குரே நெறிப்படுத்திய குழு கலந்துரையாடல் சிரேஷ்ட பேராசிரியர் உதித் ஜயசிங்க-இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், கலாநிதி பிரசாத் தர்மசேன-இயக்குனர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனம், Sheran De Alwis-பிரதம இணக்க அதிகாரி, Ma's Tropical Food Processing (Pvt) Ltd. மற்றும் உபுல் ஜயதிஸ்ஸ-இலங்கை துறைமுக அதிகாரசபையின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோர் கலந்துக் கொண்டு இலங்கையின் பொருளாதார நிலப்பரப்பைக் கையாள்வதில் பல்வேறு பொருளாதார அணுகுமுறைகள் தொடர்பான தலைப்புகளைப் பற்றி விவாதித்தனர்.

இவ் அமர்வை தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் வர்த்தகத் துறைகளில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்ட தொழில்நுட்ப அமர்வுகள் நிகழ்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பேராசிரியர் பி ஹேவகே, பேராசிரியர் கங்கனி சமரவீர, பேராசிரியர் எம்எம்டிஆர் தீகஹவத்துரே, கலாநிதி ஏஎம் இந்திக குணரத்ன, பேராசிரியர் ஏஎம்எம் முஸ்தபா, செல்வி சரோஜினி மகேஸ்வரநாதன், பேராசிரியர் ஆர்.ஏ.ரத்னசிறி, எஸ்.சந்திரகுளம். , கலாநிதி ஏஏஎம் நுஃபைல், கலாநிதி தமரா ஜயசுந்தர, கலாநிதி சஷி வீரவன்ச, கலாநிதி அப்துல் காதர் மொஹமட் ஹனஸ், கலாநிதி ஆர்எம்என்டி சிறிசோம, கலாநிதி டிகே கரந்தகட்டிய, பேராசிரியர் என்எஸ் குரே, பேராசிரியர் சுரேஸ் கனேஷ், பேராசிரியர் எச்எம்ஏ ஹேரத், மற்றும் கலாநிதி டபிள்யூ பிரேமரத்ன, ஆகியோரது வழிகாட்டல்கள் கீழ் வெவ்வேறு அமர்வுகள் நடைபெற்றன.

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புத்தாக்கம், கல்வி மற்றும் மனித மூலதனம், நிதி உள்கட்டமைப்பு, ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் நிர்வாகம், தொழிலாளர் சந்தைகள், மேக்ரோ பொருளாதார அடிப்படைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, இணையான தொழில்நுட்ப, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.

இம்மாநாட்டின் முடிவின் பின், SLFUE இன் 50வது கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தின் தொடக்கத்தில், இதன் போது SLFUE இன் இணை ஸ்தாபகராக பேராசிரியர் லலிதசிறி குணருவானின் முன்னோடி வகிபாகம் தொடர்பில் SLFUE உறுப்பினர்கள் நன்றி தெரிவித்ததாக KDU ஊடக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.