ருவன்வெலிசேய வளாகத்தில் 800வது நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஸ்தாபிப்பு
டிசம்பர் 27, 2020இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக ருவன்வெலிசேய வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.
புதிய வசதி ஆண்டு முழுவதும் கடற்படையினரால் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம்
புனித மகா தூபிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் / யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவின் அனுராதபுர விஜயத்தின் போது இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் நிறுவபட்ட 800 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. மேலும் இது பிராந்திய நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஒழிப்பதற்கான பொருத்தமான தீர்வையும் கொண்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு , கடற்படையின் தொழில்நுட்ப திறன் , மனிதவளத்தினை வழங்குகின்றது. இந்த திட்டத்திற்கான நிதியுதவி சமூக பொறுப்பு திறுவனங்கள் மூலம் திரட்டப்படுகின்றது.
இந்த நிகழ்வில் நுவரகலவிய பிராந்தியத்தின் தலைமை விகாராதிபதியும் ருவன்வெளி மகா சைத்யராமயவின் பிரதான விகாராதிபதியுமான அதி வண. பல்லேகம ஸ்ரீ சுமன ரத்னபால ஹேமரதன தேரர், கடற்படையின் சேவா வனிதா பிரிவு தலைவி சந்திமா உலுக்கேதென்ன, வட மத்திய கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.