இந்திய கடற்படையின் ‘INS Mumbai’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ஆகஸ்ட் 26, 2024இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Mumbai’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இவ்வாறாக கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Destroyer வகையின் ‘INS Mumbai’ என்ற கப்பல் நூற்று அறுபத்து மூன்று (163) மீட்டர் நீளமும் நானூற்றுப் பத்து கடற்படையினர் (410) கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சந்தீப் குமார் (Captain Sandeep Kumar) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையில் இன்று (2024 ஆகஸ்ட் 26,) உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது.
மேலும், ‘INS Mumbai’ என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் முழு கடற்படையினரும் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்லவும், கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து இலங்கை கடற்படையினருக்குக் கற்பிப்பதற்கான ஒரு செயலமர்வு கப்பலுக்குள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு கடற்படைக் கட்டளைக் கடற்கரையில் இலங்கை கடற்படைக் கப்பலுடனான நடத்தப்படுகின்ற பயிற்சிக்குப் (PASSEX) பின்னர், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ‘INS Mumbai’ என்ற போர்க்கப்பல் 29 ஆகஸ்ட் 2024 அன்று தீவை விட்டுப் புறப்பட உள்ளது.
நன்றி - www.navy.lk