இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழு
இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு
செப்டம்பர் 02, 2024
இந்திய அரச இணைச் செயலாளர் ஸ்ரீ விஜய் நெஹ்ரா (IAS) தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) குழுவொன்று, இன்று (செப். 2) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுர பாதுகாப்பு அமைச்சில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தது.
அன்பான வரவேற்பைத் தொடர்ந்து, ஜெனரல் குணரத்ன அவர்கள் வருகை தந்த இந்தியப் பிரதிநிதிகளுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஆனந்த் முகுந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, இந்திய NDC பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் நதீக குலசேகரவுடன் ஒரு தகவல் அமர்வில் பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.