பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்
வெள்ளிப் பதக்கம் வென்றார்

செப்டம்பர் 04, 2024

பாரிஸ் பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை இராணுவத்தின் வாரண்ட் அதிகாரி II சமித துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். திங்கட்கிழமை (செப். 02, 2024) நடைபெற்ற நிகழ்வில் இராணுவ தடகள வீரர் தனது பிரிவில் 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக இலங்கை இராணுவ ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பராலிம்பிக் வரலாற்றில் இலங்கையர் ஒருவரின் அதிகபட்ச சாதனைகளில் ஒன்றாக வாரன்ட் அதிகாரி II கொடித்துவக்குவின் சாதனை கருதப்படுகிறது. 2024 பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை பதக்கம் வென்ற ஒரே இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.