இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கூட்டத்தில்
பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்

செப்டம்பர் 05, 2024

கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் திங்கட்கிழமை மாலை (செப் 02) நடைபெற்ற இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) பழைய மாணவர் சங்க ஒன்றுகூடலில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வுக்கு வருகைதந்த பாதுகாப்புச் செயலாளரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா வரவேற்றத்துடன் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் வரவேட்புரை நிகழ்த்தினார்.

இந்த ஒன்றுகூடல் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் என். டீ. சி. பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவரான பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது :-

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி பழைய மாணவர்களின் பங்களிப்பைப் பாராட்டியதுடன், நெருக்கமான உறவுகளையும் ஒத்துழைப்பையும் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது கெளரவ அதிதியாகக் கலந்துகொண்ட  இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பழைய மாணவரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா விற்கு (ஓய்வு) விசேட விருது ஒன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.