மியான்மரில் பலவந்தமாக சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடுத்த மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 20 பேர் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) ஆல் மீட்கப்பட்டனர்
செப்டம்பர் 09, 2024தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) ஒரு வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு சைபர் குற்றங்களில் ஈடுபடும் ஒரு குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் மியான்மரில் சட்டவிரோதமாக ஈடுபட்டிருந்த 20 இலங்கையர்களை மீட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பிம்ஸ்டெக் (BIMSTEC) மனித கடத்தல் பற்றிய துணைக்குழு, இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM), மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO), உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நபர்களை ஏமாற்றல் மற்றும் வட்புறுத்தல் நடவடிக்கைகள் மூலம் இணையத்தள மோசடி நடவடிக்கைகளுக்காக்க ஈடுபடுத்தும் ஒரு மோசடிக்கு கும்பலை குறிவைத்து இந்நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையின் வெற்றி NAHTTF மற்றும் அதன் பங்காளிகளின் அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத முயட்சி சான்றாக உள்ளது. இந்த கூட்டு முயற்சியானது, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் மனித கடத்தலுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் ஒத்துழைப்பு செயல்திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையுடன், மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்க விரிவான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. இது உளவியல் உதவி, சமூக மறு ஒருங்கிணைப்பு, சட்ட ஆதரவு மற்றும் பிற சேவைகளை சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்கள், துறைகள், கமிஷன்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து வழங்குகிறது. NAHTTF இன் தலைமையகமாக பாதுகாப்பு அமைச்சு, பணிக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும், இந்த குறிப்பிடத்தக்க மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பல்வேறு பங்காளி நிறுவனங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.