பாதுகாப்பு செயலாளர் 'சிறிமா மியூரசி - 2024' கலை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டனர்

செப்டம்பர் 20, 2024

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன  கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நடைபெற்ற  "சிறிமா மியூரசி - 2024" இசை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இன் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வியாழக்கிழமை (செப். 19) நடைபெற்றது.

கல்லூரியின் வகுப்பறைகளுக்கு தேவையான ‘ஸ்மார்ட் போர்ட்’ உபகரணங்களை பெற்றுக் கொள்ள நிதி திரட்டுமுகமாக நடத்தப்பட்டஇந்த இசை நிகழ்ச்சியில் கல்லூரியின் மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் தொகுத்தளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர்  மாணவர்களின் திறன்களை பாராட்டியதுடன், தேசத்திற்காக அறிவார்ந்த மற்றும் ஒழுக்கம் மிக்க இளைய தலைமுறையினரை உருவாக்க கல்லூரியின் பங்களிப்பை பாராட்டினார்.

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.