இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி நியமனம்

செப்டம்பர் 14, 2024

இலங்கை இராணுவத்தின் (SLA) புதிய பிரதம அதிகாரியாக இலங்கை இராணுவ சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் நாணயக்கார, 35 ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ அனுபவத்தைக் கொண்ட ஒரு சிறந்த இராணுவ அதிகாரி ஆவார்.

இவர் இராணுவப் புலனாய்வுப் படையின் தளபதி, 21 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி உட்பட பல முக்கிய நியமனங்களில் கடமையாற்றியுள்ளார்.

மேலும் இவர் இலங்கை சிங்க படைப்பிரிவின் கேர்ணல் கமண்டான்ட்டாக பணியாற்றுவதுடன் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.