சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அதன் 18 வைத்து ஆண்டு
நிறைவை கொண்டாடியது
செப்டம்பர் 14, 2024
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் 9CSD) அதன் 18 வைத்து ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (செப் 13) கொழும்பில் உள்ள அதன் தலைமையகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும். 2006 செப்டம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி எண். 1462/20 மூலம் அப்போதைய ஊர்க்காவல் படை சிவில் பாதுகாப்புத் திணைக்களமாக மறுசீரமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுடனான பயங்கரவாத யுத்தத்தின் போது சிவில் பாதுகாப்பு துருப்பினார் முக்கிய பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் வீரர்கள் இன் நிகழ்வின் போது நினைவு கூரப்பட்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய எயார் வைஸ் மார்ஷல் பியன்வில (ஓய்வு), பயங்கரவாதப் போரின் போதும் யுத்தத்தின் பிந்தைய தேசத்தைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்திலும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்களின் வகிபாகத்தை பாராட்டினார்.