கேர்ணல் நளின் ஹேரத் இந்தியாவின் புத்தகயா-நாளந்தா பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் எதிர்காலம் முனைப்பு மாநாட்டில் உரையாற்றினார்
செப்டம்பர் 18, 2024சினெர்ஜியா அறக்கட்டளை, நாளந்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, செப்டம்பர் 12 முதல் 14 ஆம் தேதி (2024) வரை பகிரப்பட்ட மதிப்புகள், பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் எதிர்காலம் குறித்த அறிமுக போத்கயா-நாளந்தா முனைப்பு மாநாட்டை நடத்தியது. இந் நிகழ்வு இந்தியாவிள் புத்த பெருமான் ஞானம் பெற்ற இடமான புத்தகயா மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது.
சிந்தனையாளர்கள், இராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட முக்கியஸ்தர்ககள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். வேகமாக வளர்ந்து வரும் உலகில் கலாச்சாரங்கள், மதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் ஒன்றோடொன்று இணைந்திருப்பது பற்றிய உரையாடலை வளர்க்கும் நோக்கத்துடன் இம்மாநாடு நிகழ்த்தப்பட்டது.
சினெர்ஜியா அறக்கட்டளையால் அழைக்கப்பட்ட பேச்சாளர்களில் இலங்கைப் பிரதிநிதி கேர்ணல் நளின் ஹேரத் BIMSTEC எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையின் போது, அதன் தாக்கங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்க மற்றும் அழுத்தமான சவால்களை சமாளிப்பதற்கான வழிகளை உருவாக்க, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் கலாச்சார அம்சங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை கோடிட்டு காட்டினார். பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும் பேச்சாளருமான கேர்ணல் ஹேரத், தேசியப் பாதுகாப்புக் கற்கைகள் நிறுவகத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகமும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் அமைப்பு பற்றி நம்பிக்கை வெளிப்படுத்திய அவர் எதிர்கால நடவடிக்கைகளுக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் வளர்ந்து வரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறந்த பெறுபேறுகளை அடைய தீவிர மாற்றங்கள் மற்றும் பயனுள்ள அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என குறிப்பிட்ட அவர் அங்கத்துவ நாடுகள் இவ்வமைப்பை மீளமைத்து புதிய அணுகுமுறைகளுடன் மீண்டும் தொடங்குவது தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் முதல் உலகளாவிய சமத்துவமின்மை வரை மனிதகுலத்தின் முக்கியமான சவால்களை எதிர்கொள்ள, பரஸ்பர புரிதல் மற்றும் எல்லைகள் கடந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இம்மாநாட்டின் விவாதங்கள் எடுத்துக்காட்டின. பௌத்தத்தின் தத்துவ மரபுகள் மற்றும் நாலந்தாவின் பாரம்பரிய அம்சங்களை எடுத்துக்கொள்வதன் மூலம், அமைதியை மேம்படுத்துவதற்கும் செழிப்பைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு அறிவுசார் மற்றும் ஆன்மீக கட்டமைப்பை இம்மாநாடு வழங்கியது.
புத்தகயா -நாளந்தா முனைப்பு பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நிபுணர் குழுவை ஒன்றிணைத்து, அவர்களின் ஆழ்ந்த நுண்ணறிவு மற்றும் ஞானத்தைப் பகிர்ந்துக் கொள்ள வழியமைத்தது. தத்துவம், வரலாறு மற்றும் சர்வதேச உறவுகள் துறைசார் அறிஞர்கள் நாகரிகங்களை பிணைக்கும் கலாச்சார மற்றும் ஆன்மீக மரபுகள் பற்றி உரையாற்றினர். உலகளாவிய தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் இன்றைய அழுத்தமான புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் அமைதி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பகிரப்பட்ட மதிப்புகளின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர். புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் உலகளாவிய வளர்ச்சியின் எதிர்காலம் குறித்த தங்கள் முன்னோக்குகளை வழங்கினர். முக்கிய பௌத்த அறிஞர்கள் உட்பட மத மற்றும் ஆன்மீக மரபுகளைச் சேர்ந்த சிந்தனைத் தலைவர்கள், சிறந்த உலகத்தை வடிவமைப்பதில் இரக்கம், நினைவாற்றல் மற்றும் தார்மீகப் பொறுப்பு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினர்.