இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
செப்டம்பர் 18, 2024இலங்கை இராணுவத்தின் (SLA) புதிய பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (செப். 18) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலின், பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் நாணயக்காரவின் புதிய நியமனத்திற்காக அவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.