சைபர் மோசடி மையங்கள் மற்றும் மனித கடத்தல் குறித்து
NAHTTF அவசர எச்சரிக்கை விடுக்கிறது

செப்டம்பர் 19, 2024

மியான்மரில் உள்ள சைபர் மோசடி மையங்களுடன் தொடர்புடைய குற்றச்செயல்களிள் அதிகரிப்பு குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித கடத்தல்காரர்கள் இளம் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை குறிவைத்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் தருவதாக கோரி ஆட்களை கவர்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேட்கொள்ளப்பட்ட சமீபத்திய விசாரணைகள் ஒரு அபாயகரமான போக்கை வெளிப்படுத்தியுள்ளது: கடத்தல்காரர்கள் தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிக ஊதியம் பெறும் IT தொழில்களை வழங்குவதாக உறுதியளித்து ஆட்களை கவர்ந்திழுக்கிறார்கள். பின்னர் வேலை நேர்காணல் என்ற போர்வையில் துபாய் போன்ற நாடுகளுக்கு அவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டு, மியான்மரில் உள்ள இணைய மோசடி மையங்களில் பணிபுரிய வற்புறுத்தப்படுவதுடன், உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.

இவ்விடயம் தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு சட்டவிரோத இடம்பெயர்வு வழிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான அறிவுறுத்தலை விடுத்துள்ளது. வேலை தேடுபவர்கள் வெளிநாடுகளுக்கு வருகை விசாவில் பயணம் செய்ய வேண்டிய வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டும், ஏனெனில் இது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறுவதாகும் என மேலும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு பொதுமக்களை மேலும் வலியுறுத்தியுள்ள விடயங்கள்:
•    அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் பாதுகாப்பான, சட்டப்பூர்வ வெளிநாட்டு பயணங்களை மேட்கொள்ளவும்.
•    விழிப்புடன் இருத்தல் மற்றும் சந்தேகத்திற்கிடமான கடத்தல் நடவடிக்கைகள் குறித்து புகாரளிக்கவும்.
•    பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவும்.

சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தொடர்பில் புகாரளிக்க NAHTTF ஐத் தொடர்பு கொள்ளவும்;
•    0112102570/ 076 844 7700
•    nahttfsrilanka@gmail.com

உங்களின் விழிப்புணர்வு இவ்வாறான ஆபத்தான கடத்தல் வலையமைப்புகளின் பிடியிலிருந்து மனித உயிர்களை பாதுகாக்க உதவும். மேலும் அனைத்து தகவல்களும் உச்ச இரகசிய தன்மையுடன் பாதுகாக்கப்படும்.