தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் – 2024 போட்டியில் இலங்கை விமானப்படை வீரர்கள் பதக்கம் வென்றனர்

செப்டம்பர் 25, 2024

தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு இலங்கை விமானப்படை (SLAF) ஜூடோ வீரர்கள் தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.  விமானப்படை சார்ஜன்ட் தர்மவர்தன 73 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், கோப்ரல் அபேசிங்க 100 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என விமானப்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த  சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் சோன்புரி நகரில் கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில் (செப்டம்பர்) நடைபெற்றது. இலங்கை அணியில் 11 ஆண்களும் 3 பெண்களும் அடங்கினர். இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியில் கொரியா, ஜப்பான், பிரான்ஸ், சீனா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.