சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு
செயலாளர் கலந்து கொண்டார்

செப்டம்பர் 26, 2024

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொன்தா (ஓய்வு) நேற்று மாலை (செப். 25) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு கீ செங்ஹொங் இந்நிகழ்விட்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை வரேவற்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சு அதிகாரிகள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.