கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
17வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இன்று ஆரம்பமாகியது

செப்டம்பர் 26, 2024

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 17வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு (IRC) இன்று (செப் 26) பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் தொடங்கியது.

இந்த ஆண்டு ஆராய்ச்சி மாநாடு ""Unravelling the Paradigm Shift: Revolutions in the Era of AI"" என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து 17 ஆவது தடவையாக நடைபெறும் இந்த 2 நாள் (26 & 27) ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு, KDU வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) தலைமையில் இன்று காலை நடைபெற்றது. KDU துணைவேந்தர், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார வரவேற்புரை ஆற்றினார்.

ஆராய்ச்சி மாநாட்டின் சிறப்புரை புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் மற்றும் மருத்துவ விஞ்ஞானி பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன OAM MD PhD FRACP FRCP (Edin) FRCP (லண்டன்) FAHA FAAN FEAN இனால் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.