ஊடக அறிக்கை

செப்டம்பர் 29, 2024

முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பாக தொளிவுபடுத்தல்

விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்பட்டுவரும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள் 2024 செப்டம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு பின்னர் விஷேட பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபத்தப்பட மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப்படும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவு 2024 செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி வரை மாத்திரம் உரித்தாகும் என பாதுகாப்பு அமைச்சு முப்படை தளபதிகளுக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி,   முப்படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமையில் ஈடுபத்தப்பட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்படும் இந்த கொடுப்பனவு நிறுத்தப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.