பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஒக்டோபர் 01, 2024

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் ஃபஹீம்-உல்-அஸீஸ் (ஓய்வு), பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகோந்தா (ஓய்வு) இன்று (அக் 01) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.

வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் தூதுவருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த பாகிஸ்தானுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.