அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை மரியாதையை நிமித்தம் சந்தித்தார்

ஒக்டோபர் 02, 2024

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அந்தனி நெல்சன் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (அக்டோபர் 02) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் தூயகொந்தா, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இந்ந சந்திப்பை குறிக்கும் வகையில் அவருடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டார்.

அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் ஜெசிகா டி மொன்ட், உதவி பாதுகாப்பு ஆலோசகர் திரு செத் நெவின்ஸ், பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி லெப்டினன்ட் கொமாண்டர் ஷான் ஜின் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.