பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்

ஒக்டோபர் 02, 2024

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஒக்டோபர் 02) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வெவ்வேறு சந்தர்பங்களில் தனித்தனியாக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பிரியந்த வீரசூரிய ஆகியோரே  பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு)  மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

இச்சந்திப்புகளின் போது பாதுகாப்புச் செயலாளர் தூயகொந்தா பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா புதிய பாதுகாப்புச் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.