கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஒக்டோபர் 03, 2024

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) உபவேந்தர் (VC) ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (அக்டோபர் 03) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இச் சுமுகமான சந்திப்பின் போது,  உபவேந்தர் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவரும் நினைவுச் சின்னங்களை  பரிமாறிக்கொன்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.