பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
ஒக்டோபர் 03, 2024கொழும்பில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம். மொனிருஸ்ஸமான் இன்று (அக் 03) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் தூயகொந்தா பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகருடன் சுமுகமாக கலந்துரையாடினார். இதன்போது பாதுகாப்புச் செயலாளர் இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த பங்களாதேஷ் உடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்ற உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.