பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ தொடர்பு அதிகாரி பதவி ஏற்றார்

ஒக்டோபர் 04, 2024

பாதுகாப்பு அமைச்சின் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ தொடர்பு அதிகாரி (MLO), இலங்கை விமானப் படையின் எயார் வைஸ் மார்ஷல் பி என் De கொஸ்தா USP ndc MBA in HRM MHRM, இன்று (அக். 4) கடமைகளை பொறுப்பேற்றார்.

இதட்கு முன்  எயார் வைஸ் மார்ஷல் கொஸ்தா தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் ஒரு சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றினார். தனது 31 வருடங்களுக்கும் மேலான சேவை காலத்தில் இலங்கை விமானப் படையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.