தேசிய மாணவர் படையணி மேற்கத்திய வாத்திய குழு போட்டி 2024 நடைபெற்றது

ஒக்டோபர் 04, 2024

தேசிய மாணவர் படையணியின் (NCC) அகில இலங்கை மேற்கத்திய வாத்திய குழு போட்டி 2024 சமீபத்தில் (அக்டோபர் 2) ரன்டம்பேயில் உள்ள தேசிய மாணவர் படையணியின் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இவ்வருடம் 37 ஆன் மற்றும் 09 பெண் மேற்கத்திய வாத்திய குழு கெடட் பிளாட்டூன்கள் போட்டியில் பங்குபற்றின. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகாவினால் வெற்றியாளர்களுக்கு சவால் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் TI வீரதுங்க சவால் கிண்ணம் - 2024 ஆண்கள் சாம்பியன் படைப்பிரிவுக்கான விருதை வெயங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரி வென்றது. மேலும் பெண்கள் பிரிவுக்கான பிரிகேடியர் AER அபேசிங்க சவால் கிண்ணத்தை கண்டி மஹா மாயா பெண்கள் கல்லூரி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.