அலரி மாளிகை வழியாக ரொட்டுண்டா சுற்றுவட்டத்திற்கு செல்லும் பாதை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது

ஒக்டோபர் 05, 2024

கொள்ளுப்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆர்.ஏ.டி மெல் மாவத்தை, மைக்கல் சுற்றுவட்டத்திலிருந்து பிரதமர் இல்லம் (அலரி மாளிகை) வழியாக ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக 2005ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டது.

சுமார் 19 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த வீதி நேற்று (ஒக்டோபர் 04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

தற்போது, இந்த வீதி பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவதால், ஒரு வழி பாதை  மட்டுமே வாகன போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழுது பார்த்தல் பணிகள் முடிந்தவுடன் இருபுறமும் வாகன போக்குவரத்துக்காக திறக்கப்படும்.