விமானப்படை தலைமையகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

ஒக்டோபர் 07, 2024
  • முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை - பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு இன்று (ஒக்டோபர் 07) விஜயம் செய்தார்.

பாதுகாப்புச் செயலாளரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மரியாதை செலுத்தி வரவேற்றார்.

தனது விஜயத்தின் போது பாதுகாப்பு செயலாளர் விமானப்படைத் தளபதி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் விமானப்படை தலைமையகத்தின் பிரிவுகளை பார்வையிட்டார்.

விமானப்படையின் பணிப்பாளர் நாயகம் - விமான செயல்பாடுகள் விமானப்படையின் செயட்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின்னர், விமானப்படை தலைமையகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது விமானப்படை வீரர்களிடம் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் AVM தூயகொந்தா (ஓய்வு) அவர்களின் சேவைகளை பாராட்டியதுடன், முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை குறைக்கும் எண்ணம் அரசாங்கத்திட்கு இல்லை என தெரிவித்தார்.

தனது பயணத்தை முடித்துக் கொண்ட பாதுகாப்புச் செயலாளர், விமானப்படைத் தளபதியுடன் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டதுடன், பார்வையாளர்கள் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்தாவும் பாதுகாப்புச் செயலாளரின் விஜயத்தில் இணைந்துகொண்டார்.