இலங்கை கடற்படை மரீன்ஸ் படையணியின் ‘ப்ளூ வேல் 2024’
களமுனை பயிற்சி துவங்கியது

ஒக்டோபர் 08, 2024

இலங்கை கடற்படையின் (SLN) மரீன்ஸ் படையணியினரால் மூன்றாவது (3வது) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘ப்ளூ வேல் 2024’ (Blue Whale 2024), களமுனை பயிற்சி திருகோணமலை, சம்பூரில் உள்ள விதுர முகாமில் அக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமானது.

இலங்கை கடற்படை ஊடக தகவல்களுக்கமைய இந்த ஆண்டு பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் பங்களாதேஷ் கடற்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 25 கடற்படை வீரர்கள் இதில் கலந்துக்கொன்கின்றனர். மேலும், இலங்கை கடட்படையின் SLNS ஷக்தி கப்பல், கடலோர ரோந்துக் படகுகள், மற்றும் இலங்கை விமானப்படையின் பெல் 212 மற்றும் MI-17 ஹெலிகாப்டர்கள் உட்பட 195 SL கடற்படை வீரர்களும் இப்பயிச்சியில் பங்கெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறுபட்ட பிரிவுகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், நீர்நிலை நடவடிக்கைகளின் அறிவு மற்றும் திறன்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கடற்படை, விமானப்படை மற்றும் பிராந்திய பங்காளிகளிடையே பரஸ்பர புரிதலை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பங்கேட்பாளர்களிடையே போர் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கடற்படை சிறப்புப் படைகள் மற்றும் பிற பிரிவுகளின் திறன்களை மேம்படுத்தவும் இந்தப் பயிற்சி வாய்ப்பளிக்கும் என்று மேலும் தெரிவிக்கிறது.

ஆரம்ப நாள் நிகழ்வில் கடற்படை கப்பல் பிரிவு கட்டளைத் தளபதி கொமடோர் சஞ்சீவ பெரேரா, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான், மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கடற்படை அதிகாரிககளும் கடற்படை வீரர்ககளும் கலந்துகொண்டனர்.