வடக்கில் தேவையுள்ள குடும்பத்திற்கு இலங்கை இராணுவத்தின் உதவியுடன்
வீடு அன்பளிக்கப்பட்டது

ஒக்டோபர் 08, 2024

ஓமந்தை, நாவத்தகுளம் பகுதியில் உள்ள தேவையுள்ள குடும்பம் ஒன்றிட்கு இலங்கை இராணுவம் புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. இலங்கை இராணுவத்தின் (SLA) 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு பயனாளி குடும்பத்திடம் அண்மையில் (அக்டோபர் 5) கையளிக்கப்பட்டது.

பிரதேசத்திலுள்ள பரோபகாரர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் இலங்கை இராணுவத்தின் 7ஆம் இலங்கை சிங்கப் படைப்பிரிவின் (7 SLSR) துருப்புக்களால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.