இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஒக்டோபர் 08, 2024

பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே அவர்கள் இன்று (அக் 08) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

இந்த சந்திப்பு கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்திய இராஜதந்திரிக்கு பாதுகாப்புச் செயலாளரால் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் தொடர்பாக சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்டாவும் கலந்து கொண்டார்.