ஜப்பானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

ஒக்டோபர் 09, 2024

கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் பிரதித் தூதுவர் திரு. நவோகி கமோஷிதா, இன்று (அக். 09) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகோந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

திரு. கமோஷிடாவின் விஜயத்தின் போது ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் யூகி யோகோஹாரியும் இணைந்துக் கொண்டார். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் தூயகோந்தா (ஓய்வு) ஜப்பானிய தூதுக்குழுவை அன்புடன் வரவேற்று அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் பரஸ்பர மதிப்புகள் குறித்து எடுத்துக்காட்டாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடலின் முடிவில், பாதுகாப்புச் செயலாளரும் திரு.கமோஷிதாவும் இச்சந்திப்பை குறிக்கும் வகையில் நினைவு சின்னங்களை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்தாவும் கலந்து கொண்டார்.