இலங்கைதொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 09, 2024

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRC) பணிப்பாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு) இன்று (அக் 9) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பு கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் ஹேரத் (ஓய்வு) உடன் சுமுகமாக கலந்துரையாடியதுடன், அவரது புதிய நியமனம் குறித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் முன்னாள் அதிகாரியான எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு) USP, MSc (Def Stu) Mgt, BSc (Def Stu), AEC, SEMOC, DQM, GREENSL (AP), MIM (SL) கடந்த வாரம் (அக்டோபர் 4) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.