துருக்கிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஒக்டோபர் 11, 2024

துருக்கி குடியரசின் தூதுவர் மேதகு செமித் லுட்ஃபு துர்குட் அவர்கள் இன்று (அக்டோபர் 11).

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

எயார் வைஸ் மார்ஷல் துயகொந்தா (ஓய்வு) துருக்கிய தூதுவரை அன்புடன் வரவேற்றதுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை ஆராய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. இராஜதந்திர உறவுகளைத் தொடர்வதையும், பாதுகாப்பு விவகாரங்களில் பரஸ்பர புரிதலை வளர்த்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்நிப்பின் இறுதியில் இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தாவும் கலந்து கொண்டார்.