சீனத் தூதுவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

ஒக்டோபர் 11, 2024

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் அதிமேதகு கி ஜென்ஹோங், இன்று (அக். 11).

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

எயார் வைஸ் மார்ஷல் துயகொந்தா (ஓய்வு) சீனத் தூதுவருடன் சுமுகமாக கலந்துரையாடியதுடன், இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சவோ போவும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துக்கொண்டார்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தாவும் கலந்து கொண்டார்.