இந்திய உயர் பாதுகாப்பு முகாமைத்துவக் பாடநெறி (HDMC)
தூதுக்குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 14, 2024

கப்டன் வைபவ் ஜன்பந்து தலைமையிலான இந்திய உயர் பாதுகாப்பு முகாமைத்துவக் பாடநெறி தூதுக்குழு (HDMC) இன்று (அக் 14) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தது.

வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியக் குழுவினருடன் பாதுகாப்புச் செயலாளர் சுமுகமாக கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மந்தீப் சிங் நேகி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இந்திய தூதுக்குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் நதீக குலசேகரவுடன் ஒரு தகவல் அமர்வில் பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.