தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை தளபதி
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஒக்டோபர் 16, 2024

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை (ஓய்வு) இன்று (அக்டோபர் 16) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

வரவேற்பைத் தொடர்ந்து, NDC கட்டளைத் தளபதியுடன் பாதுகாப்புச் செயலாளர் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்போது தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் வளர்ச்சி தொடர்பில் இருவரும் கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.