சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஒக்டோபர் 18, 2024

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (DGCSD) பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவை (ஓய்வு) இன்று (அக்டோபர் 18) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது நிகழ்ந்த காலமதுரையாடலில் முக்கியமாக CSD இன் செயல்பாடுகள் மற்றும் CSD ஈடுபட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.