இலங்கை கடற்படை 4 FAF படையணியின் முன்னாள் யுத்த வீரர்கள் கௌரவிப்பு
ஒக்டோபர் 21, 2024இலங்கை கடற்படையின் (SLN) 4வது ஃபாஸ்ட் அட்டாக் புளோட்டில்லா (4 FAF) படையணி அதன் முன்னாள் யுத்த வீரர்களை பாராட்டி கௌரவித்துள்ளது. கடற்படை தகவல்களுக்கமைய, திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள 4 FAF போர் போர் நினைவகத்தில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 19) முதற் தடவையாக நடத்தப்பட்ட இவ்விழாவில் யுத்தத்தின் போது காயமடைந்த (WIA) 4 FAF வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இவ்விழாவின் போது, யுத்தத்தில் காயமடைந்து பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி உட்பட 41 ஏனைய தர கடற்படை வீரர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். வடக்கு மற்றும் கிழக்கில் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவத்தில் 4 FAF முக்கிய பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் இம் முன்னாள் 4 FAF கடற்படை வீரர்கள் தற்போது சேவையாற்றும் இளம் அதிகாரிகள் மற்றும் ஏனைய தர கடற்படை வீரர்ககளுடன் தமது போர்க்கால அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்நிகழ்வு வழியமைத்தது.
கடற்படையின் கிழக்கு பிராந்திய பிரதி கட்டளை தளபதி, ரியர் அட்மிரல் வருண பெர்டினாண்டஸ் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட பல 4 FAF கடற்படை வீரர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.