இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்

டிசம்பர் 28, 2020

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா> சற்று முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா> கொவிட் - 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

ஜெனரல் தரத்துக்கு  அவர் தரமுயர்த்தப்பட்டிருப்பதானது தாய்நாட்டில் நிலையான அமைதியைக் கொண்டுவருவதற்கும் அதன் பின்னரான சேவையையும் மேற்கொண்டுவருவதும் அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கைக்குறிய ஒரு சான்றாகும்.