--> -->

இலங்கை கடற்படையினால் மினுவாங்கொடை வைத்தியசாலையின் ஹீமோடையாலிசிஸ் பிரிவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ தர நீர் சுத்திகரிப்பு (RO) இயந்திரம் திறந்து வைப்பு

ஒக்டோபர் 22, 2024

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையின் ஹீமோடையாலிசிஸ் பிரிவுக்காக இலங்கை கடற்படையினரால் வடிவமைக்கப்பட்ட மருத்துவ தர நீர் சுத்திகரிப்பு (RO) இயந்திரம் நேற்று (அக் 21) திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தகவல்களுக்கமைய, இது கடற்படை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்ட 30வது மருத்துவ தர RO நீர் சுத்திகரிப்பு இயந்திரமாகும் ஆகும்.

இலங்கை கடற்படை சிறுநீரக நோயாளிகளின் டயாலிசிஸ் சிகிச்சைக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ தர RO நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை 2017 ஆம் ஆண்டு முதல் உத்பத்தி செய்து வருகிறது. மினுவாங்கொடை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள RO இயந்திரம் மூலம் ஒரே நேரத்தில் 15 சிறுநீரக நோயாளர்களுக்கு ஹீமோடையாலிசிஸ் சிகிச்சை வழங்க முடியும் என்பது விசேட அம்சமாகும்.

2015 ஆம் ஆண்டு முதல், கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மூலம் நாடலாவ ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட RO நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை தயாரித்து நிறுவியுள்ளது. மெதவாச்சிய கடவத் ரம்பேவ பிரதேசத்தில் முதலாவது RO நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த ஆண்டு (2024) ஜூன் மாதம், கல்கமுவ, பலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் 1000 வது RO நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் RO திட்டம் செயற்படுத்தப்படுகிறது .