மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஒக்டோபர் 23, 2024

இலங்கைக்கான மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் இன்று (அக்டோபர் 23) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

வரவேற்பை தொடர்ந்து, நிகழ்ந்த சுமுகமான கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா, மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.