பாதுகாப்பு செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

ஒக்டோபர் 25, 2024

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் லெப்டினண்ட் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டியவினால் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவுக்கு (ஓய்வு) இன்று (அக் 25) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோதே பொப்பி மலர் பாதுகாப்பு செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

'பொப்பி மலர் தினம்' முதலாம் உலகப் போரின் போது உயிர் தியாகம் செய்த ஆயுதப் படை வீரர்களை நினைவுகூரும் வகையில் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தூதுக்குழுவில் மேஜர் ஜெனரல் உதய பெரேரா (ஓய்வு), மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே (ஓய்வு), கேர்ணல் சுஜித் ஜயசேகர (ஓய்வு), கௌரவ. செயலாளர் நாயகம் மேஜர் டபிள்யூ. சில்டெஸ் டி சில்வா (ஓய்வு) மற்றும் மேஜர் ஐ.யு. பண்டிதரத்ன (ஓய்வு) உள்ளடங்கினர்.