பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்

டிசம்பர் 28, 2020

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) சற்று முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜெனரல் கமல் குணரத்னவின் திறன், தைரியம் அர்ப்பணிப்பு தூய்மையான தொழில்முறை மற்றும் அதிக பொறுப்புகளைச் சுமந்து எந்தவொரு தருணத்திலும் திறம்பட பணிபுரியும் திறன் ஆகியவற்றின் மேல் கொண்ட அதிக நம்பிக்கை காரணமாக நாட்டின் மிக முக்கிய பதவியான பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு  அவரை நியமித்தார்.

2019 நவம்பர் 20ஆம் திகதி அன்று பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்ற ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அன்மையில் தனது முதல் ஆண்டை செவ்வனே நிறைவு செய்தார்.

மதிப்புமிக்க ஜெனரல் தரத்திற்கு அவர்  தரம் உயர்வு பெற்றதானது> இன்றுவரை இராணுவ மற்றும் அரச உயர் பதவிகளின் ஊடாக தேசத்திற்கு வழங்கிவரும் முன்மாதிரியான தைரியமான மற்றும் அர்ப்பணிப்பான சேவையின் சான்றாகும்.