ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 01, 2024

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு கலாநிதி அலிரெசா டெல்கோஷ், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவ. 01) இடம்பெற்றது.

வரவேட்பை தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து சுமுகமாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், இரானிய தூதுவர் டெல்கோஷ், ஒமர் கய்யாமின் ருபையாத் புத்தகத்தின் சிங்கள மொழிபெயர்ப்பின் பிரதியை பாதுகாப்புச் செயலாளருக்கு அன்பளித்ததுடன் பாதுகாப்பு செயலாளரும் நினைவுச் சின்னமொன்றை தூதுவருக்கு அன்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா மற்றும் ஈரானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹொமயொன் அலியாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.