--> -->

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தலில் இருந்து உண்மையான மீள்தன்மை கட்டியெழுப்புவதை நோக்கி நமது கவனம் நகர்ந்துள்ளது'- பாதுகாப்பு செயலாளர்

நவம்பர் 04, 2024
  • அனர்த்த மேலாண்மைக்கு தேசிய அளவில் இருந்து உள்ளாட்சி மட்டம் வரை விரிவான, ஒருங்கிணைக்கப்பட்ட பதில் நடவடிக்கை அவசியம்.

“ஜனாதிபதியின் தலைமையின் கீழ், அரசாங்கதின் கவனம் வெறும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்ததல் மட்டுமின்றி உண்மையான மீள்தன்மை கட்டியெழுப்புவதை நோக்கி நகர்ந்துள்ளது'. அனர்தத்திற்கு பிந்தைய நடவடிக்கைகளில் அதன் முக்கிய பங்கைப் நிலைநிறுத்தும் அதே வேளை, அனர்த்தங்களின் போதும் அதன் பின்னரும் மக்கள் திறம்பட செயல்பட உதவக்கூடிய வகையில் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக வலுவூட்டலையும் வலியுறுத்தி செயல்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (நவம்பர் 04) கொழும்பு Galle Face Hotel ல் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) National Symposium 2024 இல் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர், அனர்தங்களினால் ஏற்படும் இழப்புகளை குறைக்க நுணுக்கமான பகுப்பாய்வு, நீண்ட கால திட்டமிடல் மற்றும் நிலையான முயற்சி தேவை. அத்துடன் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் பொது நிறுவனங்களின் முழு ஒத்துழைப்பு உள்ளிட்ட தடுப்பு மற்றும் தயார்நிலையில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இக்கருத்தரங்கம், ‘Reflections on Two Decades from Tragedy to Resilience: Retrospect of the 2004 Indian Ocean Tsunami’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. 'சுனாமி அனர்த்தத்திற்கு தயாரான நாடு' எனும் நிலையை அடைவதற்கான வரைபடத்தில் மீல் கவனம் செலுத்தும் அதே வேளையில் அறிவு மற்றும் புத்தாக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கு வேறுபட்ட நிபுணத்துவங்களை ஒன்றிணைக்க தேவையான கூட்டு மனப்பான்மையை இந்நிகழ்வு மேலும் எடுத்துக்காட்டுகிறது.

பேராசிரியர் பிரியான் டயஸ், ‘Tackling Tsunamis in Sri Lanka: Insights from High Impact Low Occurrence (HILO) Disaster Management.’ ' என்ற தலைப்பில் கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார்.

முப்படை தளபதிகள், பதில் பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், வெளிநாட்டு ராஜதந்திரிகள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் பங்குதாரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.