கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது

நவம்பர் 05, 2024

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான பத்து மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (நவம்பர் 05) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கைச்சாத்திடப்பட்டது. வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான பத்து மாடி கட்டிடம் நிர்மாணிப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் (MOH) மற்றும் Colors of Courage Trust (Garantee) Limited (COC)) ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிர்மாண வேலைகளுக்கான ஆள்பலம் இலங்கை இராணுவத்தினால் இலவசமாக வழங்கப்படும்.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மஹிபால, திரு.மஹேல ஜயவர்தன மற்றும் திரு.டயான் கோமஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன.


இத்திட்டத்திற்கு மஹேல ஜயவர்தன மற்றும் சுகாதார அமைச்சின் (MOH) அனுசரணையின் கீழ் நிறுவப்பட்ட COC மூலம் நிதியளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா, சட்ட ஆலோசகர் எயார் கொமடோர் சுரேகா டயஸ் உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், MOH மற்றும் COC அதிகாரிகள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.